ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?

Posted in Uncategorized on October 11, 2011 by muslimu

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? -

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? -

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? -
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

பிற்சேர்க்கை -
பேரீச்சை(நன்றி நண்பர் விஜய்.)

குறிப்பு -

இந்த இடுகையில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனே மறுமொழியில் குறிப்பிடுங்கள். தவறு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரைகளில் நாளிதலில் வெளியாகி, பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ள ஒன்று!.

உயிரணுக்கள் பெருக…ஆண்மைக் குறைவு நீங்க.

Posted in Uncategorized on October 11, 2011 by muslimu


உயிரணுக்கள் பெருக…

மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும். குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல், மருந்து செய்யும் வேலை

ஆண்மைக் குறைவு நீங்க…

Posted in Uncategorized on October 11, 2011 by muslimu

ஆண்மைக் குறைவு நீங்க…

மாதுளை ஓடு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்கிரகாரம், பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, நீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகி, போக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.

ஒசாமா பின்லேடன் சாகவில்லை

Posted in Uncategorized on May 8, 2011 by muslimu

அ‌ல்-க‌ய்தா தலைவ‌ர் உஸாமா பி‌ன்லேடன் மரணம் சம்மந்தமாக வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு இணையத்தளம் ஒன்று வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே இன்டர்நெட்டில் பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அன்பான சகோதரர்களே

Posted in Uncategorized on December 30, 2010 by muslimu
அன்பான சகோதரர்களே
பாரிய மழையால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்களுக்கு உதவுங்கள் இது உங்களின் கருணை
உள்ளத்துக்குரிய நேரம்

எளிய மருத்துவக் குறிப்புகள்

Posted in Uncategorized on December 14, 2010 by muslimu

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க

Posted in Uncategorized on December 14, 2010 by muslimu

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

ரத்த அழுத்தமா… என்ன சாப்பிடலாம்?

Posted in Uncategorized on October 17, 2010 by muslimu
இன்று மனிதர்களை பல வகையான நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் முதன்மை வகிக்கிறது. இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்கள்.

நம் நாட்டில் 75 சதவிகிதம் பேர் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற பழமொழி போல் தினமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டும் நோய்தான் இந்த நீரிழிவு நோயும், இரத்த அழுத்த நோயும்.

ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருந்தால் இரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த இரத்த அழுத்த நோயை மௌன கொலையாளி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.

இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.

சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சித்தர்கள் பித்த வாத அழுத்தம் என்கின்றனர்.

மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்.

இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் இருந்தால் அவை இரத்தக் குழாய்களில் படிந்து இரத்தத்தில் அழுத்தம் அதிகரித்து இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கோபம், கவலை, அச்சம் உள்ளவர்களை இரத்த அழுத்தம் அதிகம் தாக்குகிறது. உடல் வலியும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையும் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வர 25 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை, இனிப்பு பண்டங்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட பானங்கள், செயற்கை வர்ணம் அல்லது வாசனை கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கேன்களில் அடைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது.

வெண்ணெய், நெய், கிரீம், மாமிசம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

உணவில் அதிகளவு கீரைகளும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் பிஞ்சு வகைகளையே அதிகம் சாப்பிடவேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வாயுவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும்.

உணவில் அதிகளவு காரம், புளிப்பு சேர்க்கக் கூடாது.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக உணவுக்குப்பின் சிறிது பழவகைகள் உண்பது நல்லது. அதில் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு தூங்கச் சென்றால் நல்ல நித்திரை காணலாம். நல்ல நித்திரை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

மனதை அதிகம் பாதிக்கும் இடங்களுக்குச் செல்வதையோ, நிகழ்வுகளைப் பார்ப்பதையோ தவிர்ப்பது நல்லது.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சிறிது நேரம்அமர்ந்து தியானம் செய்து, பின் பால் அருந்திவிட்டு படுக்கச் செல்லவேண்டும்.

ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளை பெட்ரோல் இல்லா வாகனம் என்பார். அதாவது வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் போகும்போது வாகனம் எங்கு வேண்டுமானாலும் நின்று போகலாம்.

அதுபோல்தான் குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளின் நிலையும். அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், அதனை முறையாகவும் சாப்பிட்டு வரவேண்டும். சில நேரங்களில் இவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், தூக்கம் போன்றவை ஏற்படும். உடல் சோம்பலாகவே இருக்கும். உடலில் வலி ஏற்படும். அப்போது இவர்கள் சிறிது குளுக்கோஸ் கலந்த நீர் அருந்துவது நல்லது. அல்லது சர்க்கரை கலக்காத எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். கேழ்வரகு கூழ், கம்பு கூழ் மிகவும் சிறந்தது. எலும்பு சூப் செய்து அடிக்கடி அருந்த வேண்டும்.

மதுபானத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும்.

பாதாம் பருப்பு – 2,

முந்திரி பருப்பு – 2,

பேரிச்சை – 2,

உலர்ந்த திராட்சை – 4,

இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

குடலில் வாயுத்தன்மை அதிகரிக்காமல் பார்த்தக்கொள்ள வேண்டும். மேற்கண்ட வழிகளை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் ரத்த அழுத்த நோய்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பூண்டு

Posted in Uncategorized on October 17, 2010 by muslimu

தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.

தவிர இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் கொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டு தோறும் மாரடைப்பு ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளதாகவும்,

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுமார் 5 மாத காலத்திற்கு தினமும் வெள்ளைப்பூண்டு அடங்கிய உணவினை சாப்பிட்டு வந்தால், அவர்களின் இரத்த அழுத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும் என்று தெரிய வந்துள்ளது.

சில நேரங்களில் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் விளைவுகளைக் காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகளாக மாத்திரை எடுத்துக் கொண்டவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே உயர் இரத்த அழுத்தமா? கவலையே வேண்டாம். சாப்பிடுங்கள் வெள்ளைப்பூண்டை. (அப்படியே வேண்டுமானாலும்).

ஆண்மைக் குறைவு : வருமுன் காத்தல்

Posted in Uncategorized on September 26, 2010 by muslimu

இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். பு

கைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும். மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும்.

எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது. தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக் குறைவை உண்டாக்குவதால் அவற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம். நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தருகின்ற போலி மருத்துவர்களை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடுவது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவை கூட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’

Posted in Uncategorized on September 26, 2010 by muslimu

சம்பவம் ஒன்று: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகிக்கும் பெண் அவர். வயது 42. ஆறு மாதங்களாக அவரை அளவுக்கு மீறிய சோர்வு வாட்டியது. தூக்கம் வரவில்லை. கோபமும், எரிச்சலும் எக்கச்சக்கமாக வந்தது. இனம் புரியாத கவலை வேறு. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அலுவல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார். தனக்கு ஏன் இந்த நிலை என்று புரியாமல் தவித்த அவரை, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். பலனில்லை.

ஒரு வருட அலைச்சலுக்கு பின்பு அவருக்கு `ஆட்டோ இம்யூன் கீமோ லைட்டிக் அனீமியா` என்ற நோய் என்பது கண்டு பிடிக்கபட்டது. சம்பவம் இரண்டு: குடும்பத் தலைவியான அந்த பெண்மணிக்கு 48 வயது. கல்லூரிக்கு படிக்கச் சென்ற ஒரே மகள் அங்கு காதல் வலையில் விழ, அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள் தாய். ஏற்கனவே எப்போதாவது `உடல் பலகீனமாகிறது, கால்கள் மரத்து போகின்றன’ என்று கூறிக்கொண்டிருந்த அந்த தாயார், திடீரென்று கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்தார். மூச்சுவிட சிரமபட்டார். முற்றிலுமாக அவர் முடங்கிபோனார்.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை தாக்கியிருப்பது `குல்லியன் பாரி சின்ட்ரோம்` என்று கண்டறிந்தார்கள். அதாவது அவருடைய உடலே, அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான மாற்று பொருளை சுரந்து, ரத்தத்தில் கலந்து செயல்பட்டிருக்கிறது. ரத்தத்தில் கலந்திருந்த அந்த `எதிர் உயிரியை`, `பிளாஸ்மா பெரிசிஸ்` என்ற முறையில் பிரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். சம்பவம் மூன்று: சாட்ப்வேர் என்ஜினீயரான அந்த பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியிருந்தன.

அவரால் கர்ப்பம் ஆக முடியவில்லை. அவரது இனபெருக்க உறுப்புகளும், சினை முட்டையும் பரிசோதிக்கபட்டது. எல்லாம் நல்ல முறையில் இருந்தன. கணவரது உயிரணுவின் உயிர் சக்தி தன்மையும் சிறப்பாகவே இருந்தது. எல்லாம் சிறப்பாக இருந்தும் அந்த பெண் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என்பதை பற்பல சோதனைகளுக்கு பின்பே கண்டுபிடித்தார்கள். பெண்களின் உடலில், இன்னொரு உயிரை வளர்க்கும் சக்தி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில பெண்களின் உடலுக்குள், அவர்கள் உடலுக்கு எதிரான `எதிர் உயிரிகள்` உருவாகும். அவை இன்னொரு உயிரை, உடலுக்குள் உருவாகவிடாமல் தடுத்துவிடும். அப்படிபட்ட எதிர் உயிரிகள் அந்த பெண்ணின் உடலுக்குள் செயல்பட்டு கருத்தரிக்காமல் செய்திருக்கிறது.

“சில பெண்களுடைய உடல் கணவருடைய விந்தணுவையே இன்னொரு அன்னிய பொருளாக பாவிக்கும். விந்தணுவை உள்ளே விடாமல் எதிர் உயிரி மூலம் அதன் சக்தியை அழித்துவிடும். இதனால் கணவரிடம் தரமான உயிரணு இருந்தும், தன்னிடம் முதிர்வடைந்த சினை முட்டை இருந்தும் பயனில்லை. அந்த பெண்ணால் கர்ப்பமாக முடியாது. இப்படி எதிர் உயிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால் `சர்வக்கிள் மியூக்கஸ் டெஸ்ட்` மூலம் கண்டறிந்துவிடலாம். சில பெண்களின் உடல் முதல் கட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உயிரணுவை உள்வாங்கிக்கொள்ளும். அடுத்த கட்டமாக அது கருப்பைக்குள் சென்று வளர, என்டோமெட்ரியம் என்ற பஞ்சு திசு மீது ஒட்டவேண்டும்.

அப்படி ஒட்டி வளர `பாஸ்போ லிப்பிட்` என்ற சுரப்பு அவசியம். ரத்தம் அந்த சுரப்புக்கு எதிரான `எதிர் உயிரியை` உருவாக்கி, ஒட்ட விடாமல் கருவைக் கலைத்து அபார்ஷன் ஆக்கி வெளியேற்றிவிடும். இப்படி பெண்ணின் உடலுக்குள்ளே உயிரை அழிக்கும் எதிர் உயிரியை அடையாளங்கண்டு கட்டுபடுத்தினால்தான் பெண் கர்ப்பம் ஆக முடியும்..”- என்று கூறுகிறார், டாக்டர் மகேஸ்வரி. “இப்படி எதிர் உயிரி உருவாகி தாக்கும் பாதிப்பு பெண்களுக்குத்தான் 65 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கபடுகிறார்கள். எதிர் உயிரியால் பாதிக்கபடுகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்”-என்றும் அதிர்ச்சி குண்டு போடுகிறார். இந்த நிலை தற்போது அதிகரிக்க என்ன காரணம்? “நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைடன் கூடிய அதிக வேகமும், பெயர்- புகழோடு வாழவேண்டும் என்ற போட்டி மனபான்மையும் பெண்களிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மரபு வழியாக வந்துகொண்டிருக்கும் ஒரு சில நோய் தொடர்புகள், சத்துணவு சாப்பிடாமை, சரியான நேரத்திற்கு தூங்காமை போன்ற தாக்கங்கள் எல்லாம் இப்போது பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. இளமையில் அடங்கிக்கிடக்கும் அத்தகைய பாதிப்புகள் நாற்பது வயதுக்கு மேல் தலைதூக்கி, தாக்கத் தொடங்குகிறது. ” – என்று கூறும் டாக்டர் மகேஸ்வரி ரத்தத்தில் இருக்கும் தன்மைகளை ஆராயும் `இம்னோ ஹேமட்டலாஜி`யில் எம்.டி. பட்டம் பெற்றவர். இவர் சென்னையில் வசிக்கிறார். இந்தவித நோய்கள் பெண்களை எப்படி தாக்குகிறது? “நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நோய்க்கிருமிகள் மற்றும் கெடுதல் விளைவிக்கும் பொருட்களில் இருந்து அது நம்மை காக்கும். மண்ணீரல், கழுத்து பகுதியில் இருக்கும் தைமஸ் சுரபி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட் போன்றவை உடலை நோயில் இருந்து காப்பவைகளாக செயல்படும்.

இவை எப்படி செயல்படும் என்பதையும் விளக்குகிறேன். நமது கை விரல்களில் `லிம்ப்வெசல்`கள் உள்ளன. இவை ரத்தக் குழாய்களைவிட மெலிதானது. ரத்தக்குழாயின் ஊடே ஓடும். நமது விரல் நுனியில் அடிபட்டு காயமாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடனே அதில் பாக்டீரியாக்கள் குடியேறி, புண்ணாக்கிவிடும். பின்பு பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலக்க முயற்சிக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாக்களை ஒரே இடத்தில் பிடித்துவைக்கும். பிடித்துவைக்கும் இடத்தில் வலியும், வீக்கமும் உருவாகும். அதைத்தான் நாம் `நெரி கட்டுதல்` என்று கூறுகிறோம். பிடித்துவைத்துவிடுவதால், அந்த பாக்டீரியாக்களால் ரத்தத்தில் கலக்க முடியாது. உடலில் ஒரு காயம் என்றாலே எல்லா வெள்ளை அணுக்களும் ஒரே இடத்திற்கு வந்து தடுத்து தாக்கி யுத்தம் செய்யும். அவைகளால் தடுத்து, தாக்கி அழிக்க முடியாதபோது பாக்டீரியாக்கள் பல்கி பெருகி, நோயை உருவாக்கி விடுகிறது.

அப்போது நாம் மருந்து சாப்பிட்டு நோயை கட்டுபடுத்துவோம். சில நேரங்களில் சிலருக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியே, எதிர் உயிரியை உருவாக்கி அவர்கள் உடலையே தாக்கும். இதனை `ஆட்டோ இம்னோ டிசாடர்` என்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் மேற்கண்ட மூன்று சம்பவங்களில் பார்த்தோம். இந்த பாதிப்புக்கு நாம் சிகிச்சை கொடுக்கும்போது, எந்த சுரப்பி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதிக்கு மட்டும் மருந்துகொடுக்க முடியாது. நாம் கொடுக்கும் மருந்து மொத்தமாக போய் ரத்தத்தில் கலந்துதான் நோய்க் கிருமிகளை அழிக்க முற்படும். அப்போது பக்க விளைவுகள் தோன்றலாம்” நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான இந்த `எதிர் உயிரிகள்` ரத்தத்தில் கலந்து விஷமாக்காத அளவிற்கு பெண்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

“ஆட்டோ இம்னோ டிசார்டர் நோய்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்தாலும் முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. கட்டுபடுத்தத்தான் முடியும். அதனால் பெண்கள் அதிகமான வேலைபளு, அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், வாழ்வியல் சிக்கல்களால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் அதை எளிதாகக் கையாண்டு, அதில் இருந்து விடுபட்டுவிட வேண்டும். உடலில் அதிகமான சூரிய வெப்பம் நேரடியாக தாக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளை உண்ணவேண்டும். இதை எல்லாம் மீறி நோய் வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அது `ஆட்டோ இம்னோ டிசார்டர்’ ஆக இருக்குமா என்றும் பரிசோதிக்க வேண்டும். சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”- என்கிறார்.

இதயம் காக்கும் பழங்கள்

Posted in Uncategorized on September 26, 2010 by muslimu


இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும். சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.

அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. “An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது. உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு. இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.

புதிய வைரஸ் எச்சரிக்கை

Posted in Uncategorized on September 26, 2010 by muslimu

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது? நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

EID MUBARAK

Posted in காத்தான்குடி, kattankudy on September 10, 2010 by muslimu

Miracle of Allah In Nepal

Posted in Uncategorized on September 2, 2010 by muslimu

Yes its miracle of  ALLAH. Happend in Nepal. Govt didn’t allowed the crane for Mosque minar and said that `go and ask your ALLAH to help you.

நேபாள பள்ளிவாயல் அதிசயம்

Posted in Uncategorized on September 2, 2010 by muslimu

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

Posted in காத்தான்குடி, kattankudy on August 19, 2010 by muslimu

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.

இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது. ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார். “தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார். அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால். அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.

ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய்

Posted in Uncategorized on August 19, 2010 by muslimu

பாகற்காயுடன் மிளகு சீரகம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும். ரொம்ப மிளகு சேர்க்க தேவையில்லை. (பாகற்காய், தண்ணீர் எல்லாமே குடிக்கும் அளவிற்கு அரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.(இது எங்க மாமியார் சொன்னது).

கலோஞ்சி என்கிற கருஞ்சீரகம் சர்க்கரை வியாதி, பிரெஷர் எல்லாத்துக்கும் நல்லது.க‌ருஞ்சீர‌க‌த்தை இரவு த‌ண்ணீரில் ஊற‌வைத்து காலை வெரும் வ‌யிற்றில் அந்த‌ த‌ண்ணீரை குடிக்க‌வும்.

வெந்தய‌ம் இர‌வு ஊற‌வைத்து காலையில் அதை வ‌டித்து அந்த‌ த‌ண்ணீரை காலையில் குடிக்க‌வும். இல்லை அதை ந‌ல்ல‌ கொதிக்க‌ வைத்து வ‌டிக‌ட்டியும் குடிக்க‌லாம்/

லோ பேட் மோரில் க‌ருவேப்பிலை, இஞ்சி, வெந்த‌ய‌ப்பொடி க‌ல‌ந்து அரைத்து 11 ம‌ணி வாக்கில் குடிக்க‌லாம், இதே வெயிட்டை குறைக்க‌வும் உத‌வும். வெயிலின் தாக‌த்தையும் தீர்க்கும்.

தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
தண்ணீர் நிறைய குடிக்கலாம் என்றால் வெரும் தண்ணீர் நிறைய குடித்தால்சிலருக்கு கொமட்டும்.

அதை ஜூஸ், மோர் , சூப், இளநீர்,தர்பூஸ் என்று குடிக்கலாம்

காய்க‌ள்(புட‌ல‌ங்காய்,க‌த்திரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ்,கோவைக்காய் அவரைக்காய் ,இது போல் ப‌ச்சை நிற‌முள்ள‌ நீர் ச‌த்து மிகுந்த‌ காய் க‌ளை பொரிய‌ல், கூட்டு குழ‌ம்பாக‌ வைத்து சாப்பிட‌லாம்.
வேப்பம்பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி சாதம் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

சர்க்கரை வியாதி என்றால் என்ன?

Posted in Uncategorized on August 19, 2010 by muslimu

நாம் உண்ணும் உணவில் உள்ள sugar ஆனது செரிமானம் ஆகி சிறு சிறு பகுதியாக பிரிக்கபடுகிறது. இவை glucose எனப்படும். glucose, நமது ரத்தத்தின் செல்களில் புகுந்து நமது உடலுக்குத் தேவையான எரிசக்தியாக பயன்படுகிறது. உடலில் pancreas என்று ஒரு gland உள்ளது. இது insulin என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் ஹார்மோன், glucose நமது ரத்தத்தின் செல்களில் புகுவதற்கு உதவுகிறது. Pancreas நமது ரத்தத்தில் எவ்வளவு க்ளுகோஸ் உள்ளதோ அதற்கேற்றவாறு insulinனை சுரக்கிறது. இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது, glucose நமது ரத்தத்திலேயே சேர்ந்து விடுகிறது. இதுவே நமது ரத்தத்தில் sugar (glucose) அளவை உயர்த்தி diabetes வர காரணமாகும். இதன் காரணமாகவே நாம் செயற்கையாக இன்சுலினை injection வடிவில் உடலில் ஏற்றிக் கொள்கிறோம்.

சர்க்கரை வியாதிக்கு தீர்வு?

இந்த நிமிடம் வரை சர்க்கரை வியாதியை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. யாராவது மருந்து என்னிடம் இருக்கிறது வாருங்கள் என்று விளம்பர படுத்தினால் டுபாக்கூர் தான். இந்நேரம் அவருக்கு nobel பரிசு கொடுத்து இந்த உலகம் அவரை கவுரவ படுத்தி இருக்கும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் வியாதியை கட்டுபடுத்தலாம் அவ்வளவுதான்.

diabetes வராமல் எவ்வாறு தடுக்கலாம்?

1) இது பரம்பரையாகவும் வரலாம். நம் உணவு பழக்கத்தை கட்டுபடுத்துவதன் மூலமாகவும் diabetesசை தவிர்க்கலாம்.

2) regular ஆக excercise செய்ய வேண்டும்.

3) excercise செய்ய முடியாதவர்கள் daily atleast 30 நிமிடம் walking ஆவது செல்லவேண்டும்.

4) அடிக்கடி blood test செய்து sugar அளவை check செய்ய வேண்டும்.

நீரிழிவை(சர்க்கரை நோய்) விரட்டும் நாவல்

Posted in Uncategorized on August 19, 2010 by muslimu

சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது? கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள “ஜம்புலின்’ என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்

சித்த மருத்துவ குறிப்புகள்

Posted in Uncategorized on August 14, 2010 by muslimu

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனின் மருத்துவ குணங்கள்

Posted in Uncategorized on August 14, 2010 by muslimu

தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

இஞ்சி

Posted in Uncategorized on August 14, 2010 by muslimu
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

இஞ்சி – சமையலறை மருத்துவர்1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

சளி

Posted in Uncategorized on August 14, 2010 by muslimu

தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல்,
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்

நோய்க்காரணம்:
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்

கைவைத்தியம்:
1. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில்
சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை
தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது.
இது நோய்க்காலத்தில்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை
குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்‍‍‍‍: மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
சூப்பாக குடிப்பதால் நம்
உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன்
காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு
எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து
தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.

3. இஞ்சி : பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை
வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை
சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில
துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை
சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள
சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குண‌மாகும்
.

4.பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில்
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.

5.பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வ‌ராமல் இருக்கும்.

6.அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான
பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை
பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும்.
முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை
சிறிது சிறிதாக கலக்க வேண்டும்.
மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து
வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு புளி ரசம்: 50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து
சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க
இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும்.
இதைக் குடித்த‌வுடன் கண்களிலும்
மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்.

சோற்றுக் கற்றாழை அதிசயத் தாவரம் !

Posted in Uncategorized on August 14, 2010 by muslimu


தேடிய சொர்க்கம் அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.

சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேகஅனல் மாறும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

kattankudy mosque shooting commander

Posted in Uncategorized on August 5, 2010 by muslimu

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை- 20 ஆண்டுகள்

Posted in Uncategorized on August 4, 2010 by muslimu

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலொன்றில் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்ப்பட்ட தாக்குதல் சம்பவம் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்

இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.

தாக்குதலில் பாதிப்புக்களை பள்ளிவாசல் சுவரில் காணக்கூடியதாக இருக்கிறது
துப்பாக்கி குண்டுகள் பள்ளிவாசலில் ஏற்படுத்திய தாக்கம்

சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேற்றர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவததை நினைவு படுத்திக் கூறும் 40 வயதான அப்துல் கரீம் மொகமது லாபீர்.

தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.

தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்
தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்

அன்று ஏற்பட்ட பாதிப்பு 20 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி

முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் சட்டத்தரணியும், சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார்

தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

இந்த சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

Posted in Uncategorized on July 23, 2010 by muslimu

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை? 1. Boot Sector Viruses: அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் “அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை” எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும். 2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்: இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம். 3. Stealthy Virus: இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும். 4. MultiPartite: இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும். 5. Polymorphic: பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும். 6. Macro மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

சென்னையில் பன்றிக்காய்ச்சலாம் மூவர் மருத்துவமனையில் அனுமதி

Posted in Uncategorized on July 1, 2010 by muslimu
அமெரிக்காவில் தோன்றிய பன்றிக்காய்ச்சல் கடந்த ஆண்டு இந்தியாவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. தீவிர சோதனைக்குப் பிறகு பன்றிக் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப் பட்டது. தற்போது பன்றிக் காய்ச் சல் மீண்டும் தலைக் காட்ட தொடங்கி உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று விட்டு திரும்புபவர்கள் மூலம் மீண்டும் பன்றிக் காய்ச்சல் இந்தியாவுக்குள் வந்துவிட்டது. குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்களை மிக அதிகமாக பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது.
கேரளத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு பன்றிக் காய்ச்சல் பரவும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் ஆஸ்பத்திரியில் ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அவரது பெயர் சம்சுல் ஹ¨தா (55).

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த இவர் இருதய கோளாறு, மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதற்காக அவரது உள் தொண்டைப் பகுதியில் இருந்து சளியை எடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனைக்காக அனுப்பியது. அந்த பரிசோதனை முடிவு வருவதற்குள் சம்சுல் கடந்த வாரம் இறந்தார்.

இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவாணன் இது பற்றி விசாரணை நடத்தினார்.

சம்சுல் ஹ¨தாவை அணுகி சிகிச்சை அளித்த வர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் எனவும், நோயாளியின் சொந்த ஊரான நாகூரில் அவர் வசித்த பகுதியில் நோய் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணை இயக்குநர் மதிவாணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச் சல் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள தொழி லாளர்களுக்கான மருத்துவ மனையில் கடந்த 18-ந் தேதி வாலிபர் ஒருவர் காய்ச்ச லுக்கு சிகிச்சை பெற வந்தார். ஆனால் அவரது காய்ச்சல் குணமாகவில்லை. 24 வயதான அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் நீடித்தது.

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் கிண்டி யில் உள்ள மத்திய பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறி குறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இவரது தாயார் துறைமுக வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. அவரது மக னுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் பரவியதால் அந்த மருத்துவமனை ஊழியர் களிடம் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த மருத் துவ மனையில் உள்ள செவிலியர்கள், உதவியாளர் களுக்கு நேற்று தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதற்கிடையே ஆவடி யைச் சேர்ந்த சுமார் 60 வயது பெண் இடைவிடாத காய்ச்சல் காரணமாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையைச் சேர்ந்த ஒரு ஆணும் நீண்ட நாட்களாக காய்ச்சல், இருமலுடன் இருந்தார்.

அவர்களிடம் ரத்த மாதிரி கள் எடுத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான எச்.1 என்1 அறிகுறி கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த 60 வயது பெண்ணும், மற்றொரு ஆணும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். தற்போது இந்த சிறப்புப் பிரிவில் 3 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனர்.

அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பன்றிக் காய்ச்சல் ஓசையின்றி பரவுவதாக பீதி கிளம்பியுள்ளது. கேரள எல்லையில் உள்ள தமிழ்நாட்டுக்காரர்களும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

குமரி மாவட்டம் முழுவ தும் இருந்து 15-க்கும் மேற் பட்டோர் நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றனர்.

கடந்த வாரம் இந்த வார்டில் 3 மாத கைக்குழந்தை சபரி, 5 வயது சிறுமி வினோலியா உள்பட 4 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் சபரி, வினோலியா ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயின் ஆரம்ப நிலையி லேயே ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றதால் இருவரின் உடல்நிலையும் தேறியது. இதையடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இப்போது பன்றி காய்ச்சல் வார்டில் அருமனையை சேர்ந்த அனந்தகிருஷ்ணன், இடைக்கோட்டை சேர்ந்த பிரதீப், கட்டிமாங்கோட்டை சேர்ந்த ஏசுராஜன் ஆகிய 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?

Posted in Uncategorized on July 1, 2010 by muslimu

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உடலுறவு நிகழ்வுகளை காமஇயல் வல்லுநர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர்.

எழுச்சி நிலை (Excitement Phase)
கிளர்ச்சி நிலை (Plaeau Stage)
உச்ச நிலை (Orgamic Phase)
மீள் நிலை (Resolution Phase)

மேற்கூறிய நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது.

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

உடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

வயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈபடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிபள் செலவழிக்கப்படகிறது. இந்த ஆற்றலானது சாதாரண மனிதன் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது.

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முள்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

ஒரு மனிதன் 30 நிமிட நேரம் மெல்லோட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.

அதாவது கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் ஒரு பூங்காவை நான்கு முறை சுற்றினால் கிடைக்கும் பலன்களை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.

Follow

Get every new post delivered to your Inbox.